ஜெயலலிதாவின் மாற்றம்!

 ஜெயலலிதாவின் மாற்றம்!

    ஏன் இல்லை ஐயா முதலில் கோட் அணிந்து கொண்டிருந்தார் சென்ற ஆட்சியில் பச்சைப் புடவை அணிந்து கொண்டிருந்தார். இப்போது கிரே கலர் சாரி அணிந்து காதில் தோடும் அணிந்து கொண்டு இருக்கிறார் என்கிறீரா? அதெல்லாம் உடை சம்பந்தமான விஷயங்கள்! நான் சொல்ல வந்தது அவரது நடைசம்பந்தமானது. ஏன் அவருக்க்கென்ன? நல்லாத்தானே நடக்கிறார்? என்று எடக்கு மடக்காய் கேளாமல் நான் சொல்வதை ... அட எழுதுவதை கொஞ்சம் பொறுமையாய் படியுங்களேன்.
   எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அவரைச் சுற்றி ஒரு அதிகாரமையம் சூழ்ந்து கொண்டிருக்கும். அவரை எளிதில் சந்தித்து விட முடியாது. செய்தியாளர்களை சந்திப்பதையே தவிர்ப்பார். கட்சிக்காரர்கள் கூட நாள் கணக்கில் அவரை சந்திக்க காத்து நிற்க வேண்டும். சாதாரண பொது மக்களை சந்திக்கவே மாட்டார்.
    வீதியெங்கும் கட் அவுட்கள் பேனர்கள் விழாக்களில் ஆடம்பரம் என அவரது ஆட்சியே ஒரு அதிரடியாக இருக்கும். நினைத்ததை நிச்சயம் சாதித்து காட்டுவார். அதன் பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படமாட்டார். இப்படியெல்லாம் இருந்த அம்மாவின் மனசில யாரு புகுந்தாங்களோ தெரியல.
     இந்த முறை பதவி ஏற்றதும் எம். எல். ஏக்கள் எல்லோரையும் தொகுதிக்கு சென்று நன்றி சொல்லிவரச்சொன்னார். அமைச்சர்கள் பட்டியலில் அதிர்ச்சி ஏற்படுத்தி புது முகங்களை இளைஞர்களை அமைச்சர்களாக்கினார். அத்துடன் தான் சட்டப்பேரவை வரும்போது போக்குவரத்து தடை செய்ய வேண்டாம் என்று கூறி அனைவரையையும் ஆனந்த அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். இத்துடன் விட்டாரா?ஆடம்பர விழாக்கள் வேண்டாம் என கூறியவர்.இலவச அரிசி வழங்கு விழாவை எளிமையாக்கி அசத்தியதோடு தரமான அரிசியையும் வழங்கி அசத்தியுள்ளார்.
டெல்லி சென்று திரும்பியதும் தனக்கு பேனர் கட் அவுட் வைத்தவர்களை கண்டித்த அவர் ஆடம்பரமான செலவுகளைத் தவிர்க்குமாறு அமைச்சர்களை கேட்டுக் கொண்டார். தற்பொழுது ஸ்ரீரங்கம் சென்றுள்ள அவர் வழியில் மக்களை சந்த்தித்து அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வது அவரிடம் எதிர்பாராத மாற்றத்தையே காட்டுகிறது. தன் சொந்த தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்து பேசிய ஜெயலலிதா கட்சியின் வெற்றிக்கு பாடுபட்டவர்களுக்கு தங்க மோதிரம் தந்து கவுரவித்தார்.
   அத்துடன் கட்சிக்காக பாடுபடும் உண்மைத் தொண்டர்களுக்கு கட்சி பரிசு வழங்கும் என்று சொன்னவர்.,சைக்கிள் ரிக்ஷா தொழிலாளிக்கு ஆட்டோ ரிக்சா வழங்கி உள்ளார். ஜெயலலிதாவின் இந்த மாற்றம் மக்களிடையே மட்டுமல்ல மாற்று கட்சியினரிடமும் அவரது கட்சிக் காரர்களிடமும் கூட வறவேற்பை பெற்றுள்ளது.
  இத்தகைய மாற்றங்களோடு சில வெட்டி பிடிவாதங்களையும் களைவாரேயானால் தமிழகம் கண்டிப்பாய் தலைநிமிரும். இந்த மாற்றங்கள் நிலையானவையா ?என்பதும் நமக்கு சந்தேகமே ஏனெனில் கூட இருக்கும் சில பழம் பெருச்சாளிகள் என்ன செய்யுமோ என்பதும் தெரியவில்லை!
ஆனால் மக்களிடம் ஜெயலலிதாவின் இந்த அணுகுமுறைக்கு நல்ல வறவேற்பு உள்ளது. இலவச பொருட்கள் வழங்குவதிலும் நல்ல தரமான் பொருட்களை தர வேண்டும் என்று அவர் செய்யும் முயற்சிகளை தமிழகம் பார்த்துக் கொண்டுதான் உள்ளது. இந்த மாற்றங்கள் தொடர்ந்து நல்லாட்சி தருவார் என்று நம்புவோமாகா !ம்ம் நம்பிக்கை தானே வாழ்க்கை!

முதல் கட்டமாக அரசு கொடுக்க உள்ள மிக்சி, கிரைண்டர், ஃபேன்கள் எவ்வளவு தெரியுமா?
25 லட்சம் மிக்சிகள்  வாங்கவுள்ள விலை மதிப்பு ரூ 500 கோடி
25 லட்சம் டேபிள் டாப் வெட்கிரைண்டர்கள்    ரூ 600 கோடி
25 லட்சம் மின்விசிறிகள்   ரூ 250 கோடி
இலவசப் பொருட்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமாம் அரசு விதித்துள்ள நிபந்தனைகள்!
நீண்ட பழுதில்லா உழைப்புத்திறன்.
மிக்சியில் 550 வாட் மின் திறன் மோட்டார்.
தரமான இரண்டு ஜார்,மூடிகள் பிளேடுகள்
ஐ.எஸ்.ஐ தரத்துடன் பி.ஏ.எஸ் சோதனை.
மோட்டார் ஓடும்போது பொருட்களை சூடாக்க கூடாது.
மார்கெட்டில் பிரபல பொருட்களை விட அதிக தரம்.
இரண்டு ஆண்டு வாரண்டி , பகுதி வாரி சேவை மையம்.
இரண்டு லிட்டர் கிரைண்டரில் வலுவான காயில், தரமான அரவைக்கல்.
மேஜை மின்விசிறியில் தரமான கண்டன்சர்,மோட்டார்,உடையாத இறக்கைகள்,
உயர் மின் அழுத்தத்தால் பாதிக்க கூடாது.
அனைத்து பரிசோதனைகளுக்கும் உட்படுத்திய தரச்சான்று.
சிறந்த தரச்சான்று தயாரிப்புக்கே அனுமதி.

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! பதிவு பிடித்து இருந்தால் நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2