அம்மா!

அம்மா!

கருவிலே நானிருக்கும்
போது கட்டிலிலே புரண்டு படுத்தால்
கருவுக்கு வலிக்குமென்று
நீ வலி சுமந்தாய்!
கையிலே நான் தவழ்ந்தபோது
சிசுவுக்கு ஆகாதென்று
சிரசிலே நீ பூ தவிர்த்தாய்!
மார்பிலே நான் பால் குடிக்க
மாந்தம் வருமென மாங்கனி
நீ வெறுத்தாய்!
காதணி விழாவினிலே
ஆச்சாரி என் காதை துளைக்கையில்
வலியினில் நீ துடித்தாய்!
தந்தையின் கோபத்திலிருந்து
தடுப்பணையாய் நீ
எனை காத்தாய்!
பெற்றவள் நீ எனை மெத்த கற்றவன்
எனும் நிலைக்கு உயர்த்தினாய்!
எத்தனையோ நாள்
நேரம் கடந்து நான் இல்லம்
நுழைகையில் நீ துயிலாமல்
நடை திறந்தாய்!
என் அம்மா நீ என்
பசி அறிவாய் நானுன்
பசி அறியேன்!
அருகினில் உன் அருமை
புரியவில்லை!

புரிந்தபின் நீ அருகிலில்லை
உன் வலியை உணர
எனக்கு உதிக்கவில்லை வேளை!
உதித்த போது நீ இங்கு
இல்லை!உய்விப்பாய் எனை நீயே!

(அன்னையர் தின கவிதை ஒரு நாள் லேட்டாக)

தங்கள் வருகைக்கு நன்றி! கருத்தினை இட்டு செல்லலாமே! உங்கள் வாக்கினை கீழுள்ள நிரலிகளில் இட்டுச் செல்லலாமே!

Comments

  1. நல்லா இருக்கு

    ReplyDelete
  2. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!
    திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
    "உள்ளம் சொல்லுமே அம்மா…. அம்மா…அம்மா…!!!"

    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    வாழ்த்துகளுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (எனது இன்றைய பதிவு "அவன் ஒரு குடையைத் தேடி" (சிறு கதை)
    படித்திட வேண்டுகிறேன்.)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!