+2 tips

#தேர்வுக்கு முதல் நாள் நள்ளிரவு வரை படிக்க வேண்டாம் அதிகாலையில் எழுந்து படியுங்கள்.
#நன்கு தெரிந்த பாடங்களை படித்த பின் எழுதி பாருங்கள். இது வரை படிக்காத பாடங்களை புதிதாக படித்து நேரத்தை வீணாக்கவேண்டாம்.
#தேர்வு காலங்களில் உங்கள் உடல் நிலையில் கவனம் வையுங்கள்.
#குறைந்தது அரைமணி நேரத்திற்குமுன்பு தேர்வு மையத்திற்கு சென்று விடுங்கள்.
#உங்களுக்கு நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள்.
#தேர்வு மையத்தில் பதட்டம் அடைய வேண்டாம் .எங்கும் கவனத்தை சிதற விடாதீர்கள்
#தேர்வு கால்ங்களில் தெளிவாக திட்டமிட்டு படியுங்கள் உங்கள் ஆசிரியர் பெற்றோர் கூறிய அறிவுறைகளை மனதில் நினைத்து நன்றாக முயற்சி செய்து படியுங்கள்.எழுதுங்கள்.
#எல்லாம் எழுதி முடித்த பின் பிழை உள்ளதா என நிதானமாக பாருங்கள்.கேள்வி எண்ணை சரியாக எழுதி உள்ளீர்களா என சரி பாருங்கள்.
#தேர்வுக்கு புதிய பேனா பயன்படுத்துவதை தவிர்த்து ஏற்கனவே பயன்படுத்தியபேனாவை பயன் படுத்தினால் கையெழுத்து சிறப்பாக அமையும்.
#வெற்றி பெற வாழ்த்துக்கள்!

               நன்றி : தினமலர்.

+2
தமிழ் முதல் தாள் முக்கிய வினாக்கள்!

1.கம்பர் இயற்றிய வேறு நூல்கள் யாவை?
2. நாடோரும் எதனைபாடுதல் வேண்டும்?
3வரத நஞ்சைய பிள்ளை தமிழ்ன்னையை வாழ்த்துவம் என்று எங்னம் கூறுகிறார்.
4.புறநானூற்றால் அறியப்படும் செய்திகள் யாவை?
5எட்டுத் தொகை நூல்கள் யாவை?
6.நரிவெரு உத்தலையார் பயனில்லாத முதுமையுடயாரைவிளித்து கூறுவனவற்றை எழுதுக.
7.பராய்க் கடன் உரைத்தல் விளக்குக.
8.இடம்சுட்டி விளக்குக. “அஞ்சிலோதியை வரக் கரைந்தீமே”
9.மறவற்க எனவும் துறவற்க எனவும் வள்ளுவர் கூறுவன
10எதனை மறத்தல் எதனினும் நன்று?
11. எளியனவும் அரியனவும்ஆவது எது/
12.நன்றி செய்தாரது நட்பை விடலாகாது ஏன்/
13.பொறையுடைமை அதிகாரம் வெளிப்படுத்தும் கருத்துக்கள்.
14.சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று நீதிகள்
15. “உண்டுகொல்” என்னும் முறையில் கண்னகி சினந்து கூறியனயாவை?
16.கண்ணகியின் சூளுரையும் நகர்மாந்தர் மயங்கி கூறியனவும் யாவை?
17.”கண்டெனென்” என்று அனுமன் கூறியவை?
18.கனையாழி கண்ட சீதையின் செயல்கள்
19.சீதையைக் கண்டு வந்து அனுமன் கூறிய செய்திகள்
20தாவீதன் கோலியாத்துக்கு உரைத்த மறுமொழி யாது?
21.ஆத்தா கிழவி யார்?
22.பாண்டியன் பரிசாகிய பேழைக்குள் இருந்தன யாவை?
23 அந்த்தாதி பெயர்க்காரணம் கூறுக
24.முக்கூடலில் கூடும் ஆறுகள் யாவை?
25.இராச ராச சோழ்னின் வி,வாள், முரசு,கொடி,குடை, குறித்து கூறப்பட்டன யாவை?
26.தலைவி மேகத்திடம் மொழிந்த தூது மொழிகள் யாவை?
27தென்கரை நாட்டின் வளம் குறித்து முக்கூடல் பள்ளு கூறுவன
28மேகக் கூட்டங்கள் எவ்வாரெல்லாம் உருவகம் செய்யப்படுகின்றன?
29சுவடிச் சாலையில் இருக்க வேண்டிய நூல்கள் யாவை?
30சிக்கனத்தால் வரும் பயன்கள் யாவை?
31.மூலையில் கிடக்கும் வாலிபனிடம் தாராபாரதி கூறுவன
32தேவார மூவர் யார்?
33கிறித்துவ கம்பர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
34. குலசேகர ஆழ்வார் வேண்டுவதும் வேண்டாததும் யாவை?   

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2