இன்று சோமப்பிரதோஷம்


மஹா பிரதோஷ விரதக் கதையும் விளக்கமும்.

            தொகுப்பு சிவஸ்ரீ அ.சாமிநாத சிவாச்சாரியார். நத்தம்

மஹாவிஷ்ணு முதலான தேவர்கள் அமிர்தம் அடைவதற்காக பாற்கடலை கடைந்தபோது ஆலகால விஷம் தோன்றியது. அது கண்டு அஞ்சிய அனைவரும் உயிர் காத்தருள்க என்று ஓலமிட்டுக்கொண்டு இடமாகவும் வலமாகவும் சென்று சன்னதியின் முன்னுள்ள ரிஷப தேவனது அண்டத்தில் ஒளிந்து கொண்டனர். கருணாமூர்த்தியான சிவன் ரிஷப தேவனது கொம்பின் நடுவில் தோன்றி அவ்விஷத்தை உண்டுவிட்டார். அது கண்ட பார்வதி தனது கரத்தால் ஈசனது கழுத்தில் கைவைத்துத் தடுக்கவே விஷம் கண்டத்தில் நின்றது. ஈசன் நீலகண்டன் ஆனார். தேவர்களால் துதிக்கபட்ட சிவபார்வதியர் நந்தியின் கொம்பின் நடுவில் நடனமாடினர். இவ்வாறு நஞ்சை உண்டு தேவர்களை காத்த சமயம் கார்த்திகைமாத சனிப்பிரதோஷ காலமாகும் ஆகவே கார்த்திகை மாதத்தில் வரும் சனிபிரதோஷம் மிகவும் விசேஷமானது. இப்பிரதோஷக் கதை கடம்பவன புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

       பிரதோஷவகையும் காலமும்:

            பிரதோஷம்,நித்யபிரதோஷம்,மாதபிரதோஷம்,மஹாபிரதோஷம் என மூன்று வகைப்படும்.

நித்ய பிரதோஷக்காலம்: தினமும் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4 நாழிகை பின் 3 3/4 நாழிகை சேர்ந்த 7 1/2 நாழிகை.

மாத பிரதோஷகாலம்: பிரதிமாதம் வளர்பிறை,மற்றும் தேய்பிறை திரயோதசி திதியன்று சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை.

மஹா பிரதோஷம்: இவை மூன்று வகைப்படும் உத்தமம், மத்யமம், அதமம்.

உத்தம மஹாபிரதோஷம்: சித்திரை,வைகாசி, ஐப்பசி,கார்த்திகை, ஆகிய மாதங்களில் வளர்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.

மத்யம மஹாபிரதோஷக்காலம்: சித்திரை,வைகாசி, ஐப்பசி,கார்த்திகை, ஆகிய மாதங்களில்தேய்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.

அதம மஹாபிரதோஷ காலம்:மேற்கூறிய நான்கு மாதங்களைத்தவிர மற்ற மாதங்களில் வரும் வளர்பிறை தேய்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.

சோமசூக்தபிரதட்சணம்: முதலில் நந்தியை தரிசித்து அப்பிரதட்சணமாக சண்டிகேஸ்வரர் வரைசென்று அங்கு திரும்பி பிரதட்சணமாக வழியில் நந்தியை தரிசித்து கோமுகியை அடையவேண்டும் மீண்டும் திரும்பி வந்து நந்தியைதரிசித்து சண்டிகேஸ்வரரயை அடையவேண்டும்.மீண்டும் பிரதட்சணமாக வந்து நந்தியை தரிசிக்காமல் கொமுகியைஅடைந்து திரும்பி நந்தியைதரிசிக்காமல்சண்டிகேஸ்வரரை தரிசித்து பின்னர் பிரதட்சணமாகவந்து நந்தியை தரிசித்து பின்னர்,நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் சிவனை தரிசித்து வழிபட வேண்டும்.இப்பிரதட்சணம் செய்து வழிபட்டால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.

முக்கிய விளக்கம்: 2 1/2  நாழிகை கொண்டது 1 மணி எனவே 3 3/4 நாழிகை கொண்டது 1.1/2மணி . எனவே சூர்யாஸ்தமனத்திற்கு முன் 1.1/2மணி பின் 1.1/2மணி என இரு முகூர்த்த காலம் கொண்டது பிரதோஷகாலமாகும். அதாவது தோராயமாக பிரதோஷகாலம் மாலை 4.1/2மணி முதல் 7.1/2மணி வரை ஆகும்.

ரிஷப தேவருக்கு முதலில் பூஜை என்று காராணாகமத்தில் கூறியுள்ளதால் முதலில் அவருக்கு பூஜை செய்யப்படுகிறது.

பிரதோஷ விரத பலன் : கடன் வறுமை,நோய்,பயம், அபமிருத்யு, நீங்கப்பெற்று புத்திரபிராப்தியும் சிவ கைவல்யமும் அடையப்பெறுவார்கள்.

நத்தம் வாலீஸ்வரர். செங்குன்றம் அருகே உள்ள பஞ்செட்டியில் இருந்து மேற்கே செல்லும் பாதையில் 3கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வாலீஸ்வரர் ஆலயம் வாலி வழிபட்ட தலமான இத்தலத்தில் நந்தி விசேஷமாக அமைந்துள்ளது எல்லா கோயில்களிலும் நந்தி ஒருகால் உயர்த்தி மண்டியிட்டிருக்கும். இங்கு இரு கால்களையும் மண்டியிட்டு தலை சாய்க்காமல் நேராக இறைவனை தரிசிக்கும் கோலத்தில் உள்ளது இங்கு பிரதோஷ வழிபாடு செய்தால் சுருட்டபள்ளி ஷேத்திரத்தில் வழிபாடு செய்வதைவிட மும்மடங்கு பலன் கிடைக்கும் என் தல புராணம் கூறுகிறது.
        நகரத்தை விட்டு ஒதுங்கி உள்ளதாலும் பஸ் வசதி இல்லாததாலும் வழிபாடு நடக்கவே சிரமமாக உள்ள இவ்வாலயத்தில் பிரதோஷ வழிபாடு செய்து பலன் பெறலாமே!





பிரதோஷ பிரதட்சணத்தின் போது சொல்ல வேண்டிய சுலோகம். ஓம் நமச்சிவாய !சிவாய நம ஓம்!.  

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!