Monday, January 31, 2011

இன்று சோமப்பிரதோஷம்


மஹா பிரதோஷ விரதக் கதையும் விளக்கமும்.

            தொகுப்பு சிவஸ்ரீ அ.சாமிநாத சிவாச்சாரியார். நத்தம்

மஹாவிஷ்ணு முதலான தேவர்கள் அமிர்தம் அடைவதற்காக பாற்கடலை கடைந்தபோது ஆலகால விஷம் தோன்றியது. அது கண்டு அஞ்சிய அனைவரும் உயிர் காத்தருள்க என்று ஓலமிட்டுக்கொண்டு இடமாகவும் வலமாகவும் சென்று சன்னதியின் முன்னுள்ள ரிஷப தேவனது அண்டத்தில் ஒளிந்து கொண்டனர். கருணாமூர்த்தியான சிவன் ரிஷப தேவனது கொம்பின் நடுவில் தோன்றி அவ்விஷத்தை உண்டுவிட்டார். அது கண்ட பார்வதி தனது கரத்தால் ஈசனது கழுத்தில் கைவைத்துத் தடுக்கவே விஷம் கண்டத்தில் நின்றது. ஈசன் நீலகண்டன் ஆனார். தேவர்களால் துதிக்கபட்ட சிவபார்வதியர் நந்தியின் கொம்பின் நடுவில் நடனமாடினர். இவ்வாறு நஞ்சை உண்டு தேவர்களை காத்த சமயம் கார்த்திகைமாத சனிப்பிரதோஷ காலமாகும் ஆகவே கார்த்திகை மாதத்தில் வரும் சனிபிரதோஷம் மிகவும் விசேஷமானது. இப்பிரதோஷக் கதை கடம்பவன புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

       பிரதோஷவகையும் காலமும்:

            பிரதோஷம்,நித்யபிரதோஷம்,மாதபிரதோஷம்,மஹாபிரதோஷம் என மூன்று வகைப்படும்.

நித்ய பிரதோஷக்காலம்: தினமும் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4 நாழிகை பின் 3 3/4 நாழிகை சேர்ந்த 7 1/2 நாழிகை.

மாத பிரதோஷகாலம்: பிரதிமாதம் வளர்பிறை,மற்றும் தேய்பிறை திரயோதசி திதியன்று சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை.

மஹா பிரதோஷம்: இவை மூன்று வகைப்படும் உத்தமம், மத்யமம், அதமம்.

உத்தம மஹாபிரதோஷம்: சித்திரை,வைகாசி, ஐப்பசி,கார்த்திகை, ஆகிய மாதங்களில் வளர்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.

மத்யம மஹாபிரதோஷக்காலம்: சித்திரை,வைகாசி, ஐப்பசி,கார்த்திகை, ஆகிய மாதங்களில்தேய்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.

அதம மஹாபிரதோஷ காலம்:மேற்கூறிய நான்கு மாதங்களைத்தவிர மற்ற மாதங்களில் வரும் வளர்பிறை தேய்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.

சோமசூக்தபிரதட்சணம்: முதலில் நந்தியை தரிசித்து அப்பிரதட்சணமாக சண்டிகேஸ்வரர் வரைசென்று அங்கு திரும்பி பிரதட்சணமாக வழியில் நந்தியை தரிசித்து கோமுகியை அடையவேண்டும் மீண்டும் திரும்பி வந்து நந்தியைதரிசித்து சண்டிகேஸ்வரரயை அடையவேண்டும்.மீண்டும் பிரதட்சணமாக வந்து நந்தியை தரிசிக்காமல் கொமுகியைஅடைந்து திரும்பி நந்தியைதரிசிக்காமல்சண்டிகேஸ்வரரை தரிசித்து பின்னர் பிரதட்சணமாகவந்து நந்தியை தரிசித்து பின்னர்,நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் சிவனை தரிசித்து வழிபட வேண்டும்.இப்பிரதட்சணம் செய்து வழிபட்டால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.

முக்கிய விளக்கம்: 2 1/2  நாழிகை கொண்டது 1 மணி எனவே 3 3/4 நாழிகை கொண்டது 1.1/2மணி . எனவே சூர்யாஸ்தமனத்திற்கு முன் 1.1/2மணி பின் 1.1/2மணி என இரு முகூர்த்த காலம் கொண்டது பிரதோஷகாலமாகும். அதாவது தோராயமாக பிரதோஷகாலம் மாலை 4.1/2மணி முதல் 7.1/2மணி வரை ஆகும்.

ரிஷப தேவருக்கு முதலில் பூஜை என்று காராணாகமத்தில் கூறியுள்ளதால் முதலில் அவருக்கு பூஜை செய்யப்படுகிறது.

பிரதோஷ விரத பலன் : கடன் வறுமை,நோய்,பயம், அபமிருத்யு, நீங்கப்பெற்று புத்திரபிராப்தியும் சிவ கைவல்யமும் அடையப்பெறுவார்கள்.

நத்தம் வாலீஸ்வரர். செங்குன்றம் அருகே உள்ள பஞ்செட்டியில் இருந்து மேற்கே செல்லும் பாதையில் 3கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வாலீஸ்வரர் ஆலயம் வாலி வழிபட்ட தலமான இத்தலத்தில் நந்தி விசேஷமாக அமைந்துள்ளது எல்லா கோயில்களிலும் நந்தி ஒருகால் உயர்த்தி மண்டியிட்டிருக்கும். இங்கு இரு கால்களையும் மண்டியிட்டு தலை சாய்க்காமல் நேராக இறைவனை தரிசிக்கும் கோலத்தில் உள்ளது இங்கு பிரதோஷ வழிபாடு செய்தால் சுருட்டபள்ளி ஷேத்திரத்தில் வழிபாடு செய்வதைவிட மும்மடங்கு பலன் கிடைக்கும் என் தல புராணம் கூறுகிறது.
        நகரத்தை விட்டு ஒதுங்கி உள்ளதாலும் பஸ் வசதி இல்லாததாலும் வழிபாடு நடக்கவே சிரமமாக உள்ள இவ்வாலயத்தில் பிரதோஷ வழிபாடு செய்து பலன் பெறலாமே!

பிரதோஷ பிரதட்சணத்தின் போது சொல்ல வேண்டிய சுலோகம். ஓம் நமச்சிவாய !சிவாய நம ஓம்!.  

Sunday, January 30, 2011

கவிதைத் தேன்!


 காதல் மயக்கம்

குட்டிபோட்ட
பூனையாய்
உன்னைச்சுற்றி
வந்தபோது
அதட்டி அதட்டி
விரட்டினாய்!

எட்ட முடியாத
நிலவோ என்று
விலகினால்
நெருங்கி நெருங்கி
வருகிறாய்!
கட்டிபோட முடிய வில்லை
உன் நினைவுகளை
தட்டிக்கழிக்க
நினைத்தாலும்
எட்டிப்பார்க்கின்றன
எண்ணங்கள்!

கடலிலே மூழ்கியவனும்
காதலிலே மூழ்கியவனும்
மீள்வதெப்படி?

மழை!
    கவிஞர் சிகாமணி, தமிழாசிரியர்.அரசு மேனிலைப்பள்ளி சோழவரம்.

வானம் சிந்தும்
கண்ணீர் துளிகள்!
தாகம் தீர்க்கும்
அமுதத் தாரைகள்!
பாணம் காணம்
தானம் செய்யும்
மோனம் இசைக்கும்
மோனைப்பெண்ணே!
இறைவன் நீயே!
இதயம்நீயே!
உறைவாய் அணுவில்
உயிராய் தாயே!
குடிநீர் உணவாய்
குவலயம் காக்கும்
முடிநீர் போல
முன்னேற்றம் தருவாய்!
எல்லா சக்தி
எழுச்சி வடிவம்
வெல்ல உன்னை
உலகில் இல்லை!


நீ மட்டும்...!

சூரியனுக்குப் பயந்து மேகங்கள்
கூடாதிருக்கிறதா?
நிலவுக்கு பயந்து நட்சத்திரங்கள்
முளைக்காதிருக்கிறதா?
பாம்பிற்கு பயந்து தவளைகள்
பாடாதிருக்கிறதா?
காக்கைக்கு பயந்து குயில்கள்
கூவாதிருக்கிறதா?
பூனைக்கு பயந்து எலிகள்
இரை தேடாதிருக்கிறதா?
இடிக்கு பயந்து மரங்கள்
வளராதிருக்கிறதா?
இருளுக்கு பயந்து ஒளி
வீசாமல் இருக்கிறதா?
வண்டிற்கு பயந்து பூக்கள்
மலராதிருக்கிறதா?
ஆனால் ஏன் நண்பா நீ
மட்டும் தோல்விகளுக்கு
பயந்து முயற்சி செய்யாமலிருக்கிறாய்?

Saturday, January 29, 2011

துணை


துணை 

முதன் முதலில் அந்த பிச்சைக் காரனை ஒரு ஞாயிற்றுக்கிழ்மையில் பார்த்தேன். பூங்காவுக்கு சென்றபோது வாசல் மரத்தடியில் அமர்ந்து இருந்தான் கையில் ஒர் ஆர்மோனியபெட்டியுடன். அதை இசைத்துக்கொண்டு அவன் பாடுகயில் ஜேசுதாஸ் ஞாபகத்திற்கு வந்தார். நல்ல சாரீரம்.கூடவே ஒர்நாய்க்குட்டியும் தலையசைத்து ரசித்துக்கொண்டிருந்தது ‘ஹிஸ் மாஸ்டர் வாய்ஸை” .
     அதற்கப்புறம் நான் அவனை பலமுறை அந்த பூங்கா வாயிலில் பார்ப்பதுண்டு.நான் அவனின் பாடல்களுக்கு ரசிகனாகி அந்த பாடல்களை கேட்பதற்கென்றே பூங்காவிற்கு தினமும் செல்ல ஆரம்ப்பித்தேன். அந்த நாய் குட்டியும் என்னுடன் நன்கு பழக ஆரம்பித்து விட்டது.
           அந்த கண்ணில்லா குருட்டு பிச்சைக்காரனுக்கு உற்ற துணையாக இருந்தது அந்த நாய்க்குட்டி. கல்லெடுத்து எறியும் வாண்டுகளை குரத்து துரத்தும். பிச்சைக்கரன் பாடலுக்கு ஆடும் சதா அவனுடனேயே இருக்கும் அந்த நாய்க்குட்டி.
       அன்று அவன் பாடலைக்கேட்க ஆவலாக பூங்கா சென்றபோது முனிசிபாலிடிக்காரர்கள் அந்த நாய்க்குட்டியை பிடித்து வேனில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். பிச்சைக்காரனோ கெஞ்சிக்கொண்டிருந்தான் அது தெருநாய் இல்லீங்கோ என் நாய் என்னோட துனைங்க ஐயா கொஞ்சம் கருணை காட்டுங்கய்யா தயவு செஞ்சு அத உட்டுடுங்கய்யா என்று புலம்பிக்கொண்டிருந்தான்.
      நீயே ஒரு தெரு நாய் உனக்கொரு நாயாடா? என்று அவர்கல் நாயை வேனில் எற்ற நான் சார் அது சின்ன குட்டி சார் அவன்கூடத்தான் ரொம்ப நாளா இருக்கு பாவம் விட்டுடுங்க என்ற போது தோ யா வந்துட்டாரு வள்ளல் நாய் இங்க வர போறவங்கள கடிக்கிறதா கம்ப்ளைண்ட் வந்திருக்குய்யா இது பார்க்கு நாலு குழந்தைங்க வந்து விளையாடுற இடம். அதெல்லாம் விடமுடியாது. என்று வேனில் ஏறிச்சென்று விட்டார்கள்.

     என்னாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை அன்று அந்த பிச்சைக்காரனின் பாடல்களில் ஒரே சோக கீதம் தன் துணையை பிர்ந்த சோகமது.
       மறுநாள் காலை அவ்வழியே சென்ற போது கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. பிச்சைக்காரன் தங்கியிருந்த அந்த மரத்தின் அடியில் ஒரு லாரி மோதி நின்றிருக்க அந்த பிச்சைக்காரன் உடல் நசுங்கி இறந்திருந்தான்.
       ஆண் மகன்றிலை பிறிந்த பெண் மகன்றிலின் கதை நினைவுக்கு வந்தது எனக்கு மனம் கனத்து போனது.

Friday, January 28, 2011

நான் ரசித்த பூக்கள்!

நான் ரசித்த பூக்கள்!

    இப்பகுதியில் தளிர் அண்ணா ரசித்தவைகள்  இடம் பெறும்

தொலைக்காட்சிகள் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்க மக்கள் தொலைக்காட்சி மட்டும் சிறிது ஆறுதல் அளிக்கிறது. ரியல் எஸ்டேட் விளம்பர நிகழ்ச்சிகள் சிறிது ஆக்ரமித்தாலும் பல நிகழ்ச்சிகள் மன நிறைவைத்தருகின்றன
நெடுந்தொடர்கள் என்ற பெயரில் மெகா சீரியல் அழுகைகளுக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு சொல் விளையாட்டு சந்தை கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை சிறு பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் மனதை கவருகின்றன. மணிக்கொருமுறை வரும் மணிச்செய்திகளும் பரவாயில்லை.
இதில் என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி திண்டுக்கல்சரவணன்,கிருத்திகா அண்ணாச்சி பங்கேற்கும் கொஞ்சம் அரட்டை,கொஞ்சம் சேட்டை
          நேரலையான இந்நிகழ்ச்ச்யில் நகைச்சுவையை போனில் கூற வேண்டும் தொடர்பில் வரும் நேயர்கள் அரத பழசான ஜோக் சொன்னாலும் தொகுத்து வழங்கும் சரவணனும் கிருத்திகாவும் அழகாக சமாளிக்கிறார்கள். தமிழனுக்கு எப்பொழுதும் குண்டு பெண்மணிகள் மீது மோகம் அதிகம் கிருத்திகாவிற்கும் இதில் விதிவிலக்கில்லை.
கிருத்திகாவின் சிரிப்பிலேயே மயங்கி போகிறான் ரசிகன். அண்ணாச்சியின் சேட்டைகள் நம்பர்1 ரகம் வழியில் செல்வோரை மறித்து ஆனா ஆவன்னா கேட்பதாகட்டும் கழித்தல் கூட்டல் கணக்கு கேட்டு மடக்குவதாகட்டும் அவர் பாணியெ தனி.
     ஆனால் நம்மவர்கள் சில சிம்பிள் கேள்விகளுக்கே திணருவது வேடிக்கை!
அவர் கேட்ட சில கேள்விகளிதோ உங்களுக்கு விடை தெரிகிறதா பாருங்கள்.

இந்தியாவில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது?
ஆத்திச்சூடி எழுதியது யார்?
97ல் 13 போனா மீதி என்ன?
காந்தி எங்கு பிறந்தார்?
ராஜாஜி பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?
பதில் அளித்த பலரும் தவறான விடைகளையே கூறீனர். தமிழகத்தின் பொது அறிவு ரொம்ப குறைந்துவிட்டதாக தோன்றுகிறது.

நான் ரசித்த எஸ்.எம்.எஸ்  

INDIANS DON’T LIKE TO YOU STUDY IN GOVT SCHOOL,DON’T LIKE TO GO GOVT HOSPITAL,DON’T LIKE TO TRAVEL IN GOVT BUS,BUT EVERYBODY LIKE GOVT JOB! GREAT INDIANS.

எதையும் சிந்தித்து செய்தால் நமக்கு கிடைப்பது வெற்றி ஆனால் எதையும் செய்துவிட்டு சிந்திப்பதால் நமக்கு கிடைப்பது அனுபவம்.

Why indiyan girls don’t have intrest in sports?only 0.5 %girls playing games like tennis football cricket etc.. because 99.5% girls playing in boys life.

“a single moment of miss understanding is so poisonous….., it ii make us forget the hundred lovable moments spent together with in a minute”

வெற்றிகளை சந்தித்தவனின் இதயம்பூவைப்போல் மென்மையானது.தோல்விகளை மட்டுமே சந்தித்தவனின் இதயம் இரும்பை விட வலிமையானது. விவேகானந்தர்.

பையனை எதுக்கு அடிக்கரீங்க?
அவன் கிட்ட லெட்டர் போஸ்ட்பண்ணீட்டு வாடான்னா போஸ்ட் பாக்ஸ் பூட்டியிருக்குன்னு திரும்பி வந்துட்டான்.

எப்போதெல்லாம் உன் உள்ளம் வலிக்கிறதோ அப்போதெல்லாம் உன்னை நேசிக்கும் உள்ளத்திடம் பேசிப்பார் அவர்களின் அன்பு உன் மனதை சந்தோஷ படவைக்கும்.

கண்ணதாசனுக்கு பிடித்த மதம்

சிங்கப்பூரில் நடந்த விழா ஒன்றிற்கு கவிஞர் கண்ண தாசனை அழைத்திருந்தார்கள் நிகழ்ச்சி ஆரம்பித்து வெகு நேரம் ஆகியும் கவிஞர் அவைக்கு வந்த பாடில்லை. கூட்டம் பொறுமை இழ்ந்து சலசலத்தது.அந்நிலையில் கவிஞர் வந்து சேர்ந்தார். உடனே பேச ஆரம்பித்தார். “சிலருக்கு இந்துமதம் பிடிக்கும்.சிலருக்கு கிறிஸ்துவமதம் பிடிக்கும் எனக்கோ தாமதம் பிடிக்கும் என்று சொல்லி நிறுத்தினார். மக்கள் அவருடைய வார்த்தை நயத்தை ரசித்து மகிழ்ந்து ஆரவாரம் செய்தனர்.

Friday, January 21, 2011

குறும்பூ on Twitpic

குறும்பூ on Twitpic

சனியனை தீர்த்திடனும்!கும்மிருட்டு நேரம் ஆங்காங்கே வெளிச்ச சிதறல்கள், அவன் நடந்து கொண்டிருந்தான். கண்கள் சிவந்து போயிருந்தன. முகத்தில் முப்பதுநாள் தாடி உறவாடிக்கொண்டிருந்தது.என்ன சொல்லிவிட்டாள் அவள்.நான் காட்டுமிராண்டியாம் கரடிகுட்டியாம் என்னைக்கட்டிகொண்டதற்கு வேறு யாரையாவது கட்டிக்கொண்டிருக்கலாமாம்.நாகரீகம் தெரியாதவன் என்று குத்திக்காட்டுகிறாள் அவனுக்கு ஆத்திர ஆத்திரமாய் வந்தது.
           இந்த பேச்சையெல்லாம் கேட்டுக்கொண்டா அவன் வாழ வேண்டும் சனியன் தீர்த்துகட்டிட்டா நிம்மதி அப்புறம் அவன் நிம்மதியாக வாழலாம் மனைவியிடம் பாட்டு வாங்கத்தேவையில்லை ஜாலியோ ஜாலிதான்.அவன் முகத்தில் குரூரம். “ப்ளேட்” ஒன்று வாங்கினான். வீட்டிற்கு அவசர அவசரமாக சென்றான். அவனுக்குள் அவ்வளவு வெறி இன்று இந்த சனியனை தீர்த்திடனும் இன்றோடு ஒழியப்போகிறது சனியன்.
         வேகமாக ரேசரில் “ப்ளேடை” பொருத்தி தாடியை மழிக்க ஆரம்பித்தான் அவன். மனைவியோடு சண்டைக்கு காரணமான தாடிஒழிந்தது என்ற நிம்மதி பெருமூச்சு விட்டான் அவன்.

Thursday, January 20, 2011

கவிதைத் தேன்!


கவிதைத் தேன்!

அனாதைகள்!

பத்துமாதம் சுமந்தவள்
பதினோராம் மாதம்
சுமக்க மறுத்ததால்
நாங்கள் அனாதைகள்!
ஐய்யோ பாவம் என்பதே
தாலாட்டு ஆகிவிட்டது.
குப்பை தொட்டிகள்
எங்கள் தொட்டில்கள்
உதவும் கரங்களால்
உயிர் பிச்சை
பெற்றவர்கள் நாங்கள்.

எது குற்றம்?

சாலையில் நாங்கள்
பிச்சையெடுத்தால்
அது குற்றமாம்!
அலுவலகத்தில்குளுகுளு அறையில்
மேஜைக்கு கீழே கை நீட்டினால்
அது அன்பளிப்பாம்!

மேகம்

வானத்துபெண்ணிற்கு
இயற்கை
அளித்த சேலை

வீழ்வது எழுவதற்கே!

கலைக்க கலைக்க
எழும் புற்றைப்பார்!
செதுக்க செதுக்க
முளைக்கும்புல்லைப்பார்!
தேயத் தேய  
வளரும் நிலவைப்பார்!
மறைய மறைய

உதிக்கும் சூரியனைப்பார்!
இறைக்க இறைக்க
சுரக்கும் கிணற்றைப்பார்!
விழுவது எழுவதற்குத்தான்
வீழ்ந்து போவதற்கல்ல
எழுந்திரு இளைஞா!


சிரிப்பு

அவள் சிரித்தாள்
என்னைப்பார்த்து
நான் மகிழ்ந்தேன்
காதலி கிடைத்தாள் என்று
அவள் அவனோடு
சேர்ந்து சிரித்தபோது
நான் அழுதேன் அவள்
அவன்காதலி என்று
அவள் நினைவாக நான்
சிரித்தபோது உலகம்
என்னை பைத்தியமாக்கி
சிரித்தது.

இளைய தலைமுறை!


இளைய தலைமுறை!

அந்த பேருந்து நிறுத்தத்தின் முன் கல்லூரி மாணவ மாணவியரின் கூட்டம் நிரம்பிவழிந்தது.பக்கத்து பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி புரியும் எனக்கு அந்த மாணவ கும்பலின் நடத்தை அறுவெறுப்பை உண்டாக்கியது. கும்பலாக நின்று ஆண் பெண் வித்தியாசம் பாராமல் அரட்டை அடிப்பதும் சிரிப்பதும் தொட்டு பேசுவதும் அந்த பஸ் ஸ்டாண்டே அவர்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தது.
       சக மாணவர்களை வாடா போடா என்று விளித்து பேசி அவர்களை கிண்டலடிப்பதும் அவர்கள் சொன்ன பதிலுக்கு சிரிப்பதுமான அவர்களின் விளையாட்டு எனக்கு எரிச்சலாக இருந்தது. ச்சே என்ன பெண்கள் இவர்கள்? இது இருபதாம் நூற்றாண்டுதான். புதுமைபெண்களாக இருக்க வேண்டியதுதான் ஆனால் இப்படியா நடு ரோட்டில் நாலைந்து ஆண்களுடன் கும்மாளம் அடிப்பது இவர்களெல்லாம் படித்து நாட்டை திருத்தப் போகிறார்களா என்ன? மனதிற்குள் முணுமுணுத்துக்கொண்டேன். நல்ல வேளையாக பஸ் வரவே முண்டி அடித்து ஏறினோம் நல்ல கூட்டம் பஸ் நிரம்பி வழிந்தது.
      இதை பயன்படுத்தி ரோமியோ ஒருவன் அந்த மாணவியின் இடையை கிள்ள திரும்பி பளாரென அறைந்தாள் அப்பெண். சக மாணவர்களிடம் சகஜமாக தொட்டு பேசிப்பழகிய அவள் இதை கண்டும் காணாமல் விட்டு விடுவாள் என்றுதான் நினைத்தேன். ஆனால்...
           டேய் பொறுக்கி நீ அக்கா தங்கச்சி கூட பொறக்கலியா நாயே! என்று அவன் சட்டைக்காலரை பிடித்து ஒர் அறை விட அவன் அவமானத்தால் குன்றி பஸ்ஸை விட்டு இறங்கி ஓடினான்.
     நான் அந்த பெண்ணிடம் கேட்டேவிட்டேன் ஏம்மா பஸ் ஸ்டேண்டில நாலு ஆம்பள பசங்க கூட சிரிச்சு பேசி தொட்டு விளையாடின நீ பஸ்ல இந்த மாதிரி ந்டந்துகிட்டது என்னால புரிஞ்சுக்கவே முடியலயே
         அவங்க என் கிளாஸ்மேட்ஸ் தப்பான எண்ணத்தோட பழகமாட்டாங்க தப்பாவும் நடந்துக்கவும் மாட்டாங்க என் மேல என்னெ விட அவங்களுக்குத்தான் அக்கறை அதிகம். நான் அவனைத்தொட்டாலும் அவன் என்னை தொட்டாலும் அதுல அசிங்கம் இருக்காது நட்புதான் இருக்கும். ஆனா இந்த தெரு பொருக்கி கேவலமான எண்ணத்தோட என்னை உரசினான் அதான் பத்த வைச்சிட்டேன்.
      அவள் தெளிவாக கூறிவிட்டு கிளம்ப இந்த காலத்து பிள்ளைகள் ரொம்பத்தெளிவாக இருக்கிறார்கள் என்பது எனக்கு உறைத்தது.

Monday, January 17, 2011

மக்கள் திலகத்திற்கு இன்று பிறந்தநாள்

à®®à®�à¯�à®�ளினà¯� à®�தயதà¯�திலà¯� à®�à®�à®... on Twitpic
 பிற்ந்த நாள் வாழ்த்துக்கள் அன்புடன் தளிர் அண்ணா

தேவதை ! கிரேஸி கணேஷிற்கு மட்டுமல்ல பலருக்கும்!

à®�ிரà¯�ஸி à®�ணà¯�à®·à¯�à®�à¯�à®�à¯� à®�மரà¯�à®... on Twitpic

ஆடுகளம் ரெடி! on Twitpic

ஆடுகளம் ரெடி! on Twitpic

Sunday, January 16, 2011

நத்தம் ஸ்ரீ வாலீஸ்வரர்.

நதà¯�தமà¯� வாலà¯�ஸà¯�வரரà¯�.ராà®�à¯... on Twitpic
Add captionஸ்ரீ வாலீஸ்வரர் நத்தம் ராகு கேது தோஷம் போக்குபவர்.

Saturday, January 15, 2011

கவிதைத் தேன்!


விற்பனைத் திருப்பம்.

 கண்ணே!
 நீ கடை வீதிக்கு
 பொருள் வாங்க
 வந்தபோது என்
 உள்ளத்தை உன்னிடம்
 தந்தேன் ஆனால் நீயோ
 சரக்கு சரியில்லை
 என்று திருப்பி
 விட்டாயே!

முதிர் கன்னிகள்

நாங்கள் திருமண சந்தையில்
விலை போகாத
பெருமாள் மாடுகள்!
அடுத்த சந்தை நாளுக்கு
காத்திருந்து அலங்கரித்துக்
கொள்ளும் பரிதாப பதுமைகள்!
படித்திருந்தும் பண்பிருந்தும்
பணமில்லாததால்
மணமாவாதவர்கள்!
மண்ணவனை தேடி
வழிமேல் விழி வைத்திருக்கும்
திருஷ்டி பொம்மைகள்!


காற்று
சில்லென்று வீசி
சில சமயம்
சூறாவளியாய் மாறி
உயிரின் சூட்சுமமாய்
உடலிலே கலந்து
மிதமாய் தழுவி உறக்கத்திற்கு
அழைத்துசெல்லும் மேஜிக் நிபுனன்.


ஏழ்மை ஒழிப்பு

ஏழ்மையை ஒழிப்போம்
என்றார்.எங்க ஊரு
எம்.எல்.ஏ.
ஒழித்தார்.
அவருடைய
ஏழ்மையை!

மனம் ஒரு குரங்கு

உன்னிடம் மனதை
பறிகொடுத்தேன்
என்று சொன்னவர்
ஒருவாரமாய் தோழியுடன்
சுற்றுகிறார்.
மனம் ஒரு குரங்கு
என்பதால் மரம் விட்டு
மரம் தாவி விட்டதோ?

புன்னகை

நட்பு பாலத்திற்கு
நல்லதொரு
அடிக்கல் நாட்டுவிழா!

தாலி

கட்டுகட்டாய் நோட்டும்
சவரன்கணக்காய் நகையும்
கிலோகணக்காய் பாத்திரமும்
புத்தம் புதிதாய் வண்டியும்
விலையாய்க்கொடுத்து
கணவனை வாங்கியதற்கு ரசீது!.

சிலை
காக்கை குருவிகளின்
காசில்லா
கழிப்பிடம்.
நினைவுநாளிலும்
பிறந்தநாளிலும்தான்
உனக்கு மரியாதை
உன்னை உடைத்தாலோ
ஊரிலே கலவரம்

   

ஜோக்ஸ்


ஜோக்ஸ் ... ஜோக்ஸ்...

அவர ஏன் போலிஸ் பிடிச்சிட்டு போவுது.?
 ஒரு கிலோ வெங்காயம் வீட்ல பதுக்கி வச்சிருந்தாராம்.

ஏன் சார் ரொம்ப கவலயா இருக்கீங்க?
  5 கிலோ வெங்காயம் இல்லாம வீட்ல சேர்க்க மாட்டேன்னுட்டா என் பொண்டாட்டி..

ஆனாலும் கேடி கபலிக்கு இந்த துணிச்சல் கூடாது.
அவன் கல்யாண ஊர்வலத்துக்கு நம்ம ஸ்டேஷன் ஜீப் வாடகைக்கு வருமான்னு கேட்கிறான்.

அந்த மெடிக்கல் ஸ்டோர் காரர் முன்னாடி ஸ்வீட் கடை வச்சிருந்தார்னு எப்படி கண்டு பிடிச்சே?
  கடை முன்னாடி இங்கே விற்கபடும் மருந்துகள் தரமான மருந்து கம்பெனிகளால் தயாரிக்கபட்டவைனு போர்டு வச்சிருக்கறத வச்சிதான்.

ஆனாலும் வேலகாரிக்கு இவ்வளவு திமிர் கூடாது.
 ஏன் என்னாச்சு
நல்லா சமைக்கிர ஆளா பாத்து கட்டிக்க கூடாதாம்மா இந்த சமயல எப்படி சாப்பிடுறேன்னு கேக்குறா.

நான் ஆபீஸ்ல தூங்கறத மானேஜர் பார்த்துட்டாரு.
அப்புறம்
உனக்கு மட்டும் எப்படிப்பா தூக்கம் வருது எனக்கு வீட்லயும் தூங்க முடியல ஆபிஸ்லயும் தூங்க முடியிலன்னு ஒரே புலம்பல்தான்.


பொது அறிவு


உங்களுக்கு தெரியுமா?
       பொது அறிவு.

# ஒரு அடி நீள நாக்கை கொண்டிருந்தும் குரல் இல்லா மிருகம் ஒட்டகச் சிவிங்கி.
# சீனாவின் முதல் சக்ரவர்த்தி குப்லாய் கான்
# தாஜ்ம்காலை உருவாக்கிய பாரசீக சிற்பி உஸ்தாத் ஈஸா.
#ஜியாமெட்ரியின் தந்தை யூக்லிட்.
# வெள்ளி அதிகம் கிடைக்குமிடம் மெக்சிகோ
# மேற்கு சகாராவின் தேசிய கொடி வெள்ளை நிறமுடையது.
#உலகிலேயே மிகப்பெரிய உயிரினம் நீலத்திமிங்கலம்.
# “குச்சிபுடி” ஆந்திர மாநில நடனமாகும்.
# “ராஜ தரங்கிணி” காஷ்மீர் அரசர்களை பற்றிய நூலாகும்.
# “கீத கோவிந்தம்” என்ற நூலை எழுதியவர் ஜெய தேவர்.
# கவுதம புத்தரின் மருத்துவர் பெயர் ஜீவிகா.
# எகிப்தியர்கள் சூரியனை “ஆமன்ரா” என்று அழைத்தனர்.
#ஆட்டோ மொபைலின் தந்தை என்று அழைக்க படுபவர் டெய்ம்லர்.
# இந்தியாவின் முதல் தபால் தலை 1888ல் திருவாங்கூரில் வெளியிடப்பட்டது.
# மலேசியாவின் தேசியக்கனி பப்பாளிபழம்.
# பூமியை சூரியன் சுற்றி வருகிறது என்று உண்மையை கூறியவர் கோபர் நிக்சன்.
# ஐரோப்பாவின் தானியக்களஞ்சியம் ஹங்கேரி.

பவுர்ணமியில் ஓர் அமாவாசை

பவுர்ணமியில் ஓர் அமாவாசை!
     சிறுகதை  எழுதியவர் எஸ்.எஸ்.பி

உலகின் அழகிய கடற்கறைகளுள் ஒன்றான மெரினாவில் சுண்டல்காரன் ஒருவனின் ‘தொணதொணப்பை’ பொருக்க மாட்டாமல் வாங்கிய சுண்டல் பொட்டலத்துடன் மணலில் அமர்ந்திருந்த என்னை அந்த குரல் கலைத்தது.
    “ஹாய் சத்யா எப்படி இருக்கே?”
பரிச்சயமான குரலைக்கேட்டு நிமிர்ந்த நான் “ஹலோ,நீ... நீங்க நிலா தானே? நீங்க எப்படி இங்கே?”
“சாட்சாத் நிலாவேதான்! சத்யா சவுக்கியமா?”
“நிலா நீ கல்யாணமாகி மும்பையில இல்ல இருந்தே இப்ப மாற்றல் ஆகி வந்திருக்கியா? இல்ல வெகெஷனா?”
“அதெல்லாம் பழயகதை சத்யா நான் இப்ப மெட்ராஸ்லதான் இருக்கேன் ஆறுமாசமாச்சு சென்னை வந்து” “ஹஸ்பெண்ட் சவுக்கியமா?”
“அவர் போயி பத்து மாசமாச்சு” “என்ன சொல்றீங்க?”
“எஸ் சத்யா, என் புருஷன் இறந்து பத்து மாசமாகுது!” “ஆனா நீங்க?..”  “பூவும் பொட்டுமா உன்கிட்ட பேசிட்டிருக்கேன் சந்தோஷமா!..”
“சந்தோஷமாகவா?..” அதிர்ந்தேன். “எஸ்... பூவும் பொட்டும் எடுத்துட்டு வெள்ளை புடவையோட இருக்கிறதல்லாம் அந்தக்காலம் சத்யா! எல்லோரும் ஒருநாள் இறக்க போறோம் இன்னிக்கு அவர்னா நாளைக்கு நான்! இருக்கும் வரைக்கும் வாழ்க்கையை சந்தோஷமா வாழப் பழகனும் சத்யா”  நிலாவா பேசுவது என்னால் நம்ப முடியவில்லை.வியந்துபோனேன். “ஆனாலும் இந்த சின்ன வயசுல உனக்கு இப்படி ஆகியிருக்க கூடாது நிலா” “எப்படி ஆச்சு?” மாசிவ் அட்டாக் மடியில படுத்துண்டே போயிட்டார். வாட் எ பிட்டி ஐயம் ஸாரி நிலா இட்ஸ் ஓகே இதெல்லாம் வாழ்க்கையின் நிஜங்கள்.இப்ப எங்க இருக்கே நிலா?
       “இப்ப நான் தனியாத்தான் இருக்கேன் அம்மா அப்பா எற்கனவே இல்ல இருந்த ஒரே அண்ணனும் அமெரிக்காவில செட்டில் ஆயிட்டான்.அவர்போனப்புறம் நான் மெட்ராஸ் வந்துட்டேன் நாலு மாசமா தி.நகர்லதான் இருக்கேன்.பக்கத்துல ஒரு கான்வெண்ட்ல டீச்சரா ஒர்க் பண்றேன் பொழுது போகனும்ல”
     “ சரி என் சோக கதையையே கேட்டுண்டிருந்தா? உன் லைஃப்  எப்படி போகுது கல்யாணம் ஆயிடுச்சா? எத்தன பசங்க?”
   “ம்ம்.. ஆயிடுச்சு ஒரு பையன் இருக்கான்” “அப்ப குடும்பஸ்தனா மாறிட்ட எனக்கு பத்திரிக்கை கூட அனுப்பல நான் என்ன பாவியா?” “சேச்சே அதெல்லாம் ஒன்னுமில்ல ஒன்னோட அட்ரஸ் கிடைக்கல”   “சரி நேரமாவுதுஇந்தா என் அட்ரஸ் ஒருநாள் ஒய்ஃபையும் பையனையும் கூட்டிட்டுவா பை!”
 கடற்கரை இருட்டத்தொடங்கிவிட்டது.நான்பழைய நினைவுகளை அசைபோடத்துவங்கினேன். நானும் நிலாவும் ஓரே காலேஜ்.என்னுடய நெருக்கமான தோழியாக நிலா விளங்கினாள். எனக்கு கடல் கடற்கரை மிகவும் பிடிக்கும். எத்தனயோ நாட்கள் நாங்களிருவரும் பீச்சிற்கு வந்திருக்கிறோம். கல்லூரி வட்டாரமே எங்களைப் பற்றித்தான் பேசியது. காதலர்கள் என்று சொன்னது. எனக்கும் அந்த ஆசைஉண்டு ஆனால் அதை சொல்லத் தயங்கினேன். ஒருநாள் அவளிடம் என் விருப்பத்தை சொல்ல முனைந்தபோது அவள் தன் கல்யாண அழைப்பிதழை நீட்டினாள். அதனால் என் காதலை சொல்லாமல் விட்டுவிட்டேன்.
        திருமணத்திற்கு சென்று வாழ்த்தினேன் பம்பாய் மாப்பிள்ளை என்னைவிட வசதி படைத்தவன் நன்றாக இருக்கட்டுமென வாழ்த்தினேன் ஆனால் இன்று நிலாவை விதவைக்கோலத்தில் பார்க்க முடியவில்லை. என்னால் காலத்தின் வேகத்தை புரிந்து கொள்ள முடிய வில்லை.

      ஒரு ஞாயிற்றுக் கிழமை நிலாவின் வீட்டிற்குச் சென்றேன். மலர்ந்த முகமாய் ஒய்ஃப் வரலியா சத்யா? என்றாள்.இல்ல நிலா வீட்ல நீ மட்டும்தான் இருக்கியா? குழந்தை எதுவும்?
அவள் கண்கள் கலங்கிவிட்டது.அந்த பாக்கியம் எனக்கில்ல சத்யா என்றாள். சாரி நிலா
நிலா குழந்தைகளை நேசிப்பவள் எங்கே குழ்ந்தைகளை கண்டாலும் தூக்கி கொஞ்சி முத்தமிட்டு எதாவது வாங்கித் தருவாள். அவளுக்கு ஒரு குழந்தையை கடவுள் கொடுக்கவில்லை என்ன கல்மணம் இந்த கடவுளுக்கு?
       ஒருநாள் என் வீட்டிற்கு நிறைய விளையாட்டு பொருள்களுடன் வந்து என் பிள்ளையோடு விளையாடினாள்.
    அன்று இரவு என் மனைவியிடம் அவளைப்பற்றி சொன்னபோது பாவங்க என்றாள். எனக்கும் பாவாமாகத்தான் இருந்தது.
     நிலா அடிக்கடி வீட்டிற்கு வர ஆரம்பித்தாள். பையனுடன் விளையாடி என்னுடன் அரட்டையடித்து மனைவியிடம் சமையல் பழகி என்று அவள் வருகை சகஜமாகிப்போன போது என் மனதில் சலனம் ஏற்பட்டது. இவள் நமக்கு மனைவியாக இருக்க வேண்டியவள் என்ற எண்ணம் மேலோங்க தொடங்கியது. அந்த எண்ணத்தை துடைக்க அவளுடன் பழகுவதை தவிர்க்க முடிவு செய்தேன்.
      அன்று அவள் வீட்டிற்கு சென்றேன். “நிலா உன்கிட்ட தனியா பேசனும்” “நாம தனியாத் தானெ இருக்கோம்.” அ... அது. ‘சொல்லுங்க’ “இனிமே நீ என் வீட்டுக்கு வராதே நிலா” “ஏன் ஏன் வரக்கூடாது உங்க ஒய்ஃப் ஏதாவது..” “சேச்சே அவ எதும் சொல்லலே ஆனா.. “என்ன ஆனா ஆவன்னானு சும்மா சொல்லுங்க!” நம்ம காலேஜ் டேஸ்ல நம்மள பத்தி காலேஜ் என்ன சொல்லுச்சு
லவ்வர்ஸ்னு ஆனா அது ஒரு ஜோக்கில்லியா?
அது ஜோக்கில்ல நிலா நான் உன்னை விரும்பினேன் ஆனா அதுக்குள்ள உனக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சு.
நிலாவின் முகத்தில் ஒரு சின்ன மாறுதல். நான் தொடர்ந்தேன். நிலா பழசு உன்ன இப்ப பார்த்தவுடன் ஞாபகத்திற்கு வருதுநிலா உன்ன நான் விரும்பறேன் உன்ன மறக்க முடியில எங்கே என் மனைவிக்கு துரோகம் செஞ்சுடுவோனோன்னு பயமா இருக்குது.நீ இனிமே எங்க வீட்டிற்கு வராதே. முழுமூச்சில் சொல்லி முடிக்க நிலா கை தட்டினாள்.
    என்னை தீர்க்க்மாய் பார்த்து  சபாஷ் சத்யா நீங்க என்ன இப்பவும் விரும்பறீங்களா? ஆனா நான் எப்பவும் உங்களை விரும்பினது இல்ல ஒரு தோழனாத்தான் பழகி வர்ரேன் இப்ப மட்டுமில்ல எப்பவுமே ஒரு பெண்ணுக்கு தாலி கட்டிய ஒரு குழந்தைக்கு அப்பாவான நீங்க இப்ப கூட படிச்ச ஒரு பெண்ண பாத்ததும் காதல் வசப்பட்டு  ஏதேதோ கற்பனய வளர்துகிட்டு... ஒரு பொண்ணு ஆண்கள் கிட்ட சிரிச்சு பழகினாலே காதல்தானா?
எப்படி எப்படி மனைவிக்கு துரோகம் செஞ்சுடுவொம்னு பயமா இருக்கா இப்ப மட்டும் என்ன செய்யறீங்க கட்டின பொண்டாட்டி உயிரோட இருக்கறப்ப அடுத்தவள நினைக்கறதுக்கு பேர் என்ன? கட்டின கணவன் இறந்து போனாலும் அவர தவிர வேற யாரயும் நான் மனசுல நினைச்சதில்ல ஆனா நீங்க ? போங்க சார்போங்க  உங்க மனசுல இருக்க அழுக்கை பிளிச்சிங் பவுடர் போட்டு கழுவுங்க மனசில அழுக்க வச்சிகிட்டு வெளியில ஜெண்டில் மேனா நடந்துக்குங்க என்றாள்.
       பவுர்ணமி நிலா உதயமாகி வர அந்த நிலவொளியில்அவள் முகம் பிரகாசிக்க என் முகம் மட்டும் அமாவாசையாக இருண்டு கிடந்தது.(முற்றும்)

Friday, January 14, 2011

பொங்கல் வாழ்த்து

மூடிய பனித்திரை விலகி
முன்றிலில் வெய்யோன் முகம் காட்ட
வாடிய பயிர்களெல்லாம் வதனத்தில்
புன்னகை புரிய
முற்றிய கதிர்கள் எல்லாம் வெட்கத்தில்
நிலம் நோக்க
மஞ்சுள வீதியெல்லாம் மங்கல தோரணம் தொங்க
பொங்குக பொங்கலென வரும்
எங்கள் தை மகளே வருக! தங்குக நன்மையெல்லாமென
அருளை அள்ளித் தருக!

Thursday, January 13, 2011

பொது அறிவு


தெரிந்து கொள்வோம். பொது அறிவு.

·       நம் கண்களில் உள்ள தசைகள் ஒரு நாளைக்கு இலட்சம்முறைக்கு மேல் அசைந்து வேலை செய்கின்றன.
·       இந்தியாவில் தயாரான முதல் டெக்னிக் கலர் படம் ஜான்சி-கி-ராணி
·       உலகின் முதல் கல்வெட்டு லத்தீன் மொழியில் கி.மு 600இல் பொறிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
·       தபால் கார்டை முதல் முதலாக கண்டுபிடித்தவர்கள் ஆஸ்திரியர்கள்.
·       உலகிலேயே மிகப்பழமையான எழுத்துமொழி சீன மொழி.
·       பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஐஸ் படுகைகள் உருகி உருவானதுதான் நயாகரா நீர்வீழ்ச்சி.
·       தமிழகத்தின் மிகப்பெரிய கோவில் தஞ்சை பெரிய கோவில் என வழங்கும் பிரகதீஸ்வரர் கோவில்.
·       டோக்கியோவின் பழைய பெயர் “எடொ”
·       கிரிக்கெட் பிட்சின் நீளம் 20.12 மீட்டர்.
·       தெற்காசியாவின் மிகச்சிறிய நாடு மாலத்தீவுகள்.பரப்பளவு 298 ச.கீ.மீ.
·       கட்டடக்கலை இஞ்சினியர்கலை உலகிற்கு தந்த முதல் நாடு ரோமாபுரி.
·       அலாரம் அடிக்கும் கடிகாரம் 655 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டு பிடிக்கப்பட்டது.

தளிர் அண்ணா கவிதைகள் 1


முயற்சி செய்!

இளைஞனே!
கிணறு வற்றவற்ற
சுரக்கும்
புல் வெட்டவெட்ட
முளைக்கும்
நிலவு தேயதேய
வளரும்
ஆனால் நீமட்டும்
சோர்ந்துபோவதேன்?
முயற்சி செய் இளைஞா!
நாளை விடியல்
உனதுதான்.

வாய்ப்பினைத்தேடு!

இளைஞா! உறங்காதே!
உன் வாய்ப்பு பறிபோகிடும்.
இங்கு வாய்ப்புகள்குறைவு.
தேவைகள் அதிகம்.
உன் வாய்ப்பை பறிக்கபட
உன் உறக்கம் உதவிடும்
ஆகட்டும் பார்க்கலாம்
என அசையாமல் நின்றால்
அவதிதான் மிஞ்சும்.
நாளை வீணாக்காமல்
வேலை தேடு!
வாழ்க்கை வசப்படும்.

சோதனைகள் வாழ்வின் போதனைகள்

சோதனைகள் வாழ்வின்
போதனைகள் இளைஞா!
சோர்ந்து போகாதே!
ஒவ்வொரு சோதனையும்
ஓர் பாடமாய் உனக்கு
அமையும்.
அகிலம் உனக்கு புரிய
ஆரம்பிக்கும்
சாதனைகள் படைக்க
நினைப்பவனுக்கு
சோதனைகள்
சுண்டு விரலளவே
வேதனைப் படாதே!
வேகமாய் கடந்து
வெளியே வா
உன் நிலை உனக்கு
புரியும்!
சாதனைகள் படைக்க
நீ தேர்ந்திடுவாய்!


வெற்றி உன் பக்கம்.

நாட்கள் தேயத் தேய
நாமும் தேய்கிறோம் நண்பா!
நாளை நாளை
என வேலையை
தள்ளாது
வேளையைப்
பாராது உழைத்தால்
வெற்றி நிச்சயம் நண்பா!
விரைந்து செயல்படு
 
Related Posts Plugin for WordPress, Blogger...